ஜாலியன் வாலாபாக் படுகொலையின் 100வது ஆண்டு நினைவு தினமான இன்று பஞ்சாப் மாநிலமான அம்ருஸ்தரில் உள்ள அதன் நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பஞ்சாப் முதலமைச்சர் அம்ரீந்தர் சிங் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர். இப்படுகொலைக்கு காரணமான ஆங்கிலேய ராணுவ தளபதி டயரின் செயலுக்கு வருத்தம் தெரிவித்து பிரிட்டன் பிரதமர் தெரசா மே பிரிட்டன் நாடாளுமன்றத்தில் மன்னிப்பு கோரினார்.
ஜாலியன் வாலாபாக் படுகொலைக்கு மன்னிப்புக் கோரிய பிரிட்டன் தூதுவர் - punjab
அம்ரிஸ்டர்: ஜாலியன் வாலாபாக் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய பிரிட்டன் நாட்டின் தலைமைத் தூதுவரான டோம்னிக் அஸ்க்வித், இச்சம்பவம் குறித்து பிரிட்டன் சார்பில் வருத்தம் கோரினார்.
இந்நிலையில், ஜாலியன் வாலாபாக் நினைவிடத்தில் இன்று அஞ்சலி செலுத்திய பிரிட்டன் நாட்டின் தலைமைத் தூதுவர் டோம்னிக் அஸ்க்விக், இச்சம்பவம் குறித்த வருத்தத்தினை பகிர்ந்துகொண்டார். செய்தியாளர்களிடம் அவர், 100 ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற அவமானத்திற்குரிய சம்பவம் பிரிட்டன் மற்றும் இந்திய உறவுக்கிடையே மறையாத கரும்புள்ளியாக உள்ளது. இச்சம்பவத்தால் துன்பமடைந்த அனைவருக்கும் எனது வருத்தத்தையும், மன்னிப்பையும் கோருகிறேன். இந்த வடுவிற்கிடையிலும் இந்திய - பிரிட்டன் நாடுகள் நல்லுறவைப் பேணி 21வது நூற்றாண்டில் முன்னேற்றத்தை நோக்கிப் பயணிப்பதாகக் கூறினார்.
பிரிட்டன் நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சகமும் தனது ட்விட்டர் பக்கத்தில் இச்சம்பவத்தை நினைவு கூர்ந்து வருத்தம் தெரிவித்துள்ளது.