சிவ சேனா கட்சி சார்பில் ஒவ்வொரு ஆண்டும் தசரா விழா நடத்துவது வழக்கம். இந்தாண்டுக்கான விழா மும்பையில் உள்ள சிவாஜி பூங்காவில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அக்கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே, காஷ்மீர் சிறப்பு தகுதி ரத்து, ராமர் கோயில், பொது சிவில் சட்டம் போன்ற பல விவகாரங்கள் குறித்து பேசினார்.
மீண்டும் அயோத்தியா பிரச்னையை கையிலெடுக்கும் சிவ சேனா! - Shiv Sena on uniform Civil Code
மும்பை: அயோத்தியாவில் ராமர் கோயிலை கட்ட சிறப்புச் சட்டம் இயற்ற வேண்டும் என சிவ சேனா தலைவர் உத்தவ் தாக்கரே கூறியுள்ளார்.
அவர் கூறுகையில், "ராமர் கோயில் விவகாரம் நீதிமன்றத்தில் உள்ளதால், அது பற்றி யாரும் பேசக் கூடாது என பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார். ஆனால், இந்த வழக்கு 35 ஆண்டுகளுக்கு மேலாக நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. ராவணனை எப்போது ராமர் கொன்று விட்டு அயோத்திக்கு திரும்பினாரோ அப்போதே நீதிமன்றம் தன் கதவுகளை அடைத்துக் கொண்டது.
ஆனால், அயோத்தியில் ராமர் பிறந்தாரா இல்லையா என்பதுதான் பிரச்னை. இந்த மாதம் இதுகுறித்த தீர்ப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இல்லையெனில், ராமர் கோயிலைக் கட்ட சிறப்புச் சட்டம் இயற்றப்பட வேண்டும். காஷ்மீருக்கு அளிக்கப்பட்ட சிறப்பு தகுதி நீக்கப்பட வேண்டும் என பல ஆண்டுகளாகவே சிவ சேனா கோரிக்கை விடுத்து வந்தது அது தற்போது நிறைவேற்றப்பட்டுள்ளது. அதேபோல் நம்முடைய அடுத்த லட்சியம் பொது சிவில் சட்டத்தை நிறைவேற்றுவதாகும்" என்றார்.