தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

இந்திய - சீன எல்லையில் இடிந்து விழுந்த பாலம்! - தேசிய செய்திகள்

கேர்சின்: உத்தரகாண்ட் மாநிலத்தில் இந்திய - சீன எல்லைக்கு அருகேயுள்ள பாலம் அதிக பாரத்தை ஏற்றிச் சென்ற கனரக லாரி கடக்கும்போது இடிந்து விழுந்தது.

இந்தோ-சீனா எல்லையில் பாலம் இடிந்து விழுந்தது.
இந்தோ-சீனா எல்லையில் பாலம் இடிந்து விழுந்தது.

By

Published : Jun 22, 2020, 7:33 PM IST

லிலம் ஜோஹர் பள்ளத்தாக்கில் அதிக பாரத்தை ஏற்றிச் சென்ற, கனரக லாரி கடக்கும்போது இடிந்து விழுந்தது. இதில் கனரக லாரியில் இருந்த ஓட்டுநர் உட்பட இருவர், பலத்த காயம் அடைந்தனர். உடனே, அப்பகுதியில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். இந்த சம்பவத்தில் கனரக லாரி முழுவதுமாக சேதமடைந்தது.

லிலம் ஜோஹர் பள்ளத்தாக்கில் இந்திய - சீன எல்லையை நோக்கி, செல்லும் தாபா-மிலம் சாலையில் அமைந்துள்ள பாலத்தின் குறுக்கே இந்த கனரக லாரி அதிக பாரமுள்ள கட்டுமான உபகரணங்களை ஏற்றிச் சென்றுள்ளது.

கட்டுமான உபகரணங்கள் மிலமில் இருந்து சீன எல்லை நோக்கி, 65 கி.மீ. நெடுஞ்சாலை அமைப்பதற்காக கொண்டு செல்லப்பட்டதாகத் தெரிகிறது.

பாலம் இடிந்து விழுந்ததால், எல்லைப் பகுதியைச் சுற்றியுள்ள 12 கிராமங்களில் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ராணுவப் பொருட்களும் தடைபட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details