கர்நாடக மாநிலத்தில் தற்போது பருவமழை பெய்துவருகிறது. இதனால் பல மாவட்டங்களை வெள்ள நீர் சூழ்ந்துள்ளதன் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பெலகாவி மாவட்டத்தில் நேற்றிரவு (அக். 5) பெய்த கனமழையில் மேலவாங்கி கிராமத்தில் உள்ள இணைப்பு பாலம் சரிந்துள்ளது. இதனால் கோகக்-லோகாபுரா சாலை போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி கவுஞ்ஜலாகி, கலரகோப்பா, ஹடகினாலா, உதகட்டி, சஜ்ஜிஹாலா, தாவலேஸ்வரா உள்ளிட்ட பல கிராமங்களின் போக்குவரத்தும் தடைப்பட்டுள்ளது.