கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு டெல்லியில் 68 வயதான பெண்மணி ஒருவர் உயிர் இழந்தார். முன்னதாக கர்நாடகாவைச் சேர்ந்த 78 வயதான முதியவர் ஒருவர் கொரோனா வைரஸ் தாக்குதலுக்குள்ளாகி உயிரிழந்திருந்தார். கொரோனா வைரஸூக்கு இந்தியாவில் இதுவரை இருவர் உயிரிழந்துள்ளனர்.
கொரோனா உயிரிழப்பு 2ஆக அதிகரிப்பு. மத்திய சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ தகவலின்படி, நாட்டில் 82 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்புள்ளது. இவர்களுக்கு தீவிரச் சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.
கொரோனாவால் உயிரிழந்த டெல்லி பெண்மணி, ராம் மனோகர் லோகியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தார் என்று தகவல்கள் கூறுகின்றன. இதற்கிடையில் பெங்களுருவில் பணிபுரியும் கூகுள் ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று (கோவிட்-19) அறிகுறி உறுதிசெய்யப்பட்டுள்ளது. இந்தச் செய்தியை உறுதிப்படுத்தியுள்ள கூகுள், அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுவருவதாக கூறியுள்ளது.
இதையும் படிங்க:ஒன்பது மாத குழந்தையை அடித்து கொன்ற கொடூர தந்தை