தேசிய மருந்தியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி மையத்தின் ஆராய்ச்சியாளர்கள் முப்பரிமாண முறையில் அச்சிடப்பட்ட ஆண்டிமைக்ரோபியல் முகக் கவசத்தை உருவாக்கியுள்ளனர். வாய், கண், மூக்கு ஆகியவற்றின் மூலம் வைரஸ் பரவுகிறது என ஆய்வு கூறியதைத் தொடர்ந்து, சிறப்பு முகக் கவசம் உருவாக்கப்பட்டது. அது விலை மலிவானதாகவும் அணிவதற்கு எளிதாகவும் இருந்தது. இதனை கிருமி நாசினி, வைரஸ் தடுப்பு மருந்து ஆகியவற்றின் மூலம் சுத்தப்படுத்தலாம். வாய், கண் ஆகியவற்றின் மூலம் வைரஸ் பரவுவதைத் தடுக்கும் நோக்கில் ஆராய்ச்சியாளர்கள் மூன்றடுக்கு சிறப்பு முகக் கவசத்தை உருவாக்கியுள்ளனர். ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு வைரஸ் பரவுவதைத் தடுக்க இது உதவும். இதனை அணிந்து கொள்வதன் மூலம் ஒருவர் எந்த சிக்கலுமின்றி சுவாசிக்கலாம்.
கரோனாவை தடுக்க தொழில்நுட்ப கருவி - Break to Corona spread
கரோனா வைரஸ் நோயை தடுக்கும் நோக்கில் புதிய தொழில்நுட்ப கருவியை தேசிய மருந்தியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி மையத்தின் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
கதவுகள், ஜன்னல்கள் ஆகியவற்றை திறப்பதற்காகவும் கணினி, மடிக் கணினி ஆகியவற்றை ஆன், ஆப் செய்வதற்காகவும் ஆராய்ச்சியாளர்கள் கொக்கி ஒன்றை கண்டுபிடித்துள்ளனர். கை மூலம் வைரஸ் பரவலைத் தடுக்கும் நோக்கில் இந்த கொக்கி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இதுகுறித்து ஆராய்ச்சியாளர்கள் மேலும் கூறுகையில், "கரோனாவுக்கு எதிரான போரில் நாம் சிறப்பாக செயல்பட்டுவருகிறோம். இந்த கண்டுபிடிப்புகள் ஒரு பங்குதான். நோயால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள மாநிலத்தின் நலனுக்கு இதனை அங்கு டெலிவரி செய்வோம்" என்றார்.
இதையும் படிங்க: 'ரேப்பிட் சோதனைக் கருவிகள் வைரஸ் தொற்றைக் கண்டறிய பயன்படாது'