புதுச்சேரி மிஷன் வீதியில் வெளிநாட்டு பணம் மாற்றம் செய்யும் நிறுவனம் இயங்கிவருகிறது. அந்த நிறுவனத்தின் கட்டடத்திலிருந்து இன்று பெரும் புகை வெளியேறி தீப்பிடித்தது. அப்போது அவ்வழியே நடைபயிற்சி மேற்கொண்ட மக்கள், இது குறித்து தீயணைப்புத் துறைக்கு தகவல் அளித்தனர்.
பணம் மாற்றம் செய்யும் நிறுவன கட்டடத்தில் தீ விபத்து! - புதுச்சேரியில் தீ விபத்து
புதுச்சேரி: மிஷன் வீதியில் உள்ள பணம் மாற்றம் செய்யும் வியாபார நிறுவன கட்டடத்தில் ஏற்பட்ட தீயை துரிதமாக செயல்பட்டு தீயணைப்பு வீரர்கள் அணைத்தனர்.
![பணம் மாற்றம் செய்யும் நிறுவன கட்டடத்தில் தீ விபத்து! break out fire](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-7965917-81-7965917-1594352117502.jpg)
break out fire
அதன்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், துரிதமாக செயல்பட்டு தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், குளிர்சாதன இயந்திரத்தில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாகவும், இதில் நிறுவனத்தில் இருந்த பொருள்கள் சேதமடைந்துள்ளதாகவும் தெரிவித்தனர்.