தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

'மூளையில்லாத குரங்குகள்' - பாக். பேராசிரியரை சாடிய ஹிருத்திக்ரோஷன் - Hrithik Roshan

டெல்லி: திக்குவாய் பிரச்னை கொண்ட மாணவனை, சக மாணவர்கள் மத்தியில் அவமானப்படுத்திய பாகிஸ்தான் பேராசிரியரை இந்தி(ய) நடிகர் ஹிருத்திக்ரோஷன் மூளையில்லாத குரங்குகள் எனச் சாடியுள்ளார்.

மூளையில்லாத குரங்குகள்' பாக். பேராசிரியரை சாடிய ஹிருத்திக்ரோஷன் திக்குவாய் பிரச்னை, ஹிருத்திக் ரோஷன், மூளையில்லாத குரங்குகள், பாகிஸ்தான் பேராசிரியர், மரியம் ஜுல்ஃபிகர் ட்வீட்டர் Brainless monkey' Hrithik Roshan 'Brainless monkey': Hrithik Roshan calls out professor for shaming stammering student
'Brainless monkey': Hrithik Roshan calls out professor for shaming stammering student

By

Published : Feb 25, 2020, 11:28 PM IST

இந்தி திரை உலகின் முன்னணி நட்சத்திரம் ஹிருத்திக்ரோஷன். இவர் அண்மையில் ட்விட்டர் பதிவு ஒன்றுக்கு பதிலளித்திருந்தார். அந்த ட்விட்டர் பதிவில், பாகிஸ்தான் பேராசிரியர் ஒருவரை மூளையில்லாத குரங்குகள் என விமர்சித்திருப்பார்.

பாகிஸ்தானில் திக்குவாய் பிரச்னை கொண்ட மாணவன் ஒருவரை, பேராசிரியர் ஒருவர் சக மாணவர்கள் மத்தியில் உன்னால் பேச வராது என அவமானப்படுத்தியுள்ளார். இது பற்றி கோபம் கொப்பளிக்க பதிலளித்த ஹிருத்திக்ரோஷன், “திக்குவாய் பிரச்னை என்பது மாணவனின் பிரச்னையல்ல. திக்குவாயால் அவனது கனவு ஒருபோதும் தகரப்போவதில்லை. மேலும் இது அவமானம், வெட்கப்பட வேண்டிய விஷயம் அல்ல. அவனை அவமானப்படுத்துபவர்கள் மூளையில்லாத குரங்குகள்” எனக் கூறியுள்ளார்.

மரியம் ஜுல்ஃபிகர் எழுதிய பதிவுக்கு ஹிருத்திக்ரோஷன் இவ்வாறு பதிலளித்துள்ளார். ஹிருத்திக்ரோஷன் இளவயதில் திக்குவாய் பிரச்னையால் அவதிப்பட்டார். இதனை அவரே பலமுறை மேடைகளில் வெளிப்படுத்தியுள்ளார்.

இதையும் படிங்க:அமெரிக்கா திரும்பினார் டொனால்ட் ட்ரம்ப்

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details