கரோனாவால் உடல்நிலை பாதிக்கப்பட்டு டெல்லி ராணுவ ஆராய்ச்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த குடியரசு முன்னாள் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு மூளையில் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டு, சிறிய கட்டி ஒன்று மூளையிலிருந்து அகற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து, தற்போது சுவாசத்திற்காக அவருக்கு வென்டிலேட்டர் பொருத்தப்பட்டு, தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பிரணாப் முகர்ஜிக்கு மூளையில் அறுவை சிகிச்சை - சுவாசத்திற்கு வென்டிலேட்டர் பொருத்தம்!
13:18 August 10
டெல்லி: குடியரசு முன்னாள் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு மூளையில் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டு, சிறிய கட்டி ஒன்று மூளையிலிருந்து அகற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முன்னதாக, குடியரசு முன்னாள் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு நேற்று (ஆக.10) கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதுதொடர்பாக பிரணாப் முகர்ஜி தனது ட்விட்டர் பக்கத்தில், "எனக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த ஒரு வாரமாக என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்திக் கொள்ளுங்கள். உடனடியாக கரோனா பரிசோதனையை எடுத்துக்கொள்ளுங்கள்" என்று குறிப்பிட்டிருந்தார்.
இதனிடையே, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பிரணாப் முகர்ஜியை சந்தித்து நலம் விசாரித்தார்.
இதையும் படிங்க: ஐபிஎல் தொடர் : விவோ வெளியே, பதஞ்சலி உள்ளே!