தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பிரமோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணை சோதனை வெற்றி! - Brahmas சூப்பர்சோனிக் ஏவுகணை சோதனை

டெல்லி: கடற்படைக்காக தயாரிக்கப்பட்ட பிரமோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணை, சோதனையின் போது இலக்கை வெற்றிகரமாகத் தாக்கியுள்ளதாக டிஆர்டிஓ (Defence Research and Development Organisation (DRDO)) என்றழைக்கப்படும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

rdo
rdo

By

Published : Oct 18, 2020, 3:27 PM IST

Updated : Oct 18, 2020, 4:32 PM IST

இந்திய கடற்படைக்கு வலிமை சேர்க்கும் வகையில் நீண்ட தூர இலக்குகளை எளிதாகத் தாக்கும் தன்மை கொண்ட பிரமோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணையை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆர்டிஓ) தயாரித்துள்ளது. இந்த ஏவுகணையின் சோதனை முயற்சி டிஆர்டிஓ விஞ்ஞானிகள் மற்றும் கடற்படையின் உயர் அலுவலர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

இந்திய கடற்படைக்குச் சொந்தமான ஐஎன்எஸ் சென்னை "ஸ்டெல்த்" டெஸ்ட்ராயர் கப்பலிலிருந்து ஏவப்பட்ட பிரமோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணை, அரேபியன் கடலில் நிர்ணயிக்கப்பட்டிருந்த இலக்கை மிகவும் துல்லியமாகத் தாக்கியுள்ளது. இதை டிஆர்டிஓ தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளது.

இந்த ஏவுகணையை கடற்படையில் இணைப்பதன் மூலம் இந்தியக் கடற்படையின் பலம் மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Last Updated : Oct 18, 2020, 4:32 PM IST

ABOUT THE AUTHOR

...view details