அஸ்ஸாம் மாநிலத்தின் முக்கிய நகரமாகக் கருதப்படுவது கவுகாத்தி. பிரமபுத்திர நதிக்கரையில் அமைந்துள்ள இந்நகரம் இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் நகரங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இந்நிலையில் அஸ்ஸாம் மாநிலத்தில் பெய்துவரும் கனமழை காரணமாக பிரமபுத்திர நதியில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
அஸ்ஸாம் வெள்ளம் - தத்தளிக்கும் கவுகாத்தி
கவுகாத்தி: அஸ்ஸாம் மாநிலத்தில் பெய்துவரும் கனமழைக் காரணமாக மாநிலத்தின் முக்கிய நகரமான கவுகாத்தி மூழ்கும் அபாயத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது.
அஸ்ஸாம் வெள்ளம் - தத்தளிக்கும் கவுகாத்தி
இதன் காரணமாக கவுகாத்தி நகரத்தில் முக்கிய வணிக மையமான ஃபேன்ஸி பஜார் என்ற பகுதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. எந்நேரமும் அப்பகுதி முழுமையாக மூழ்கலாம் என்ற நிலையில் உள்ளது. இதனால், வெள்ள நீரை தடுக்க கவுகாத்தி நிர்வாகம் நேற்றிரவு மணல் மூட்டைகளை அடுக்கியது.
பிரமபுத்திர நதி தொடர்ந்து உயர்ந்து வருவதன் காரணமாக மச்சோவா, ஃபேன்ஸி பஜார் பர்காட் (உள்நாட்டுத் துறைமுகம்), சுக்லேஸ்வர் பார்காட் உள்ளிட்ட பகுதிகளும் மூழ்கும் அபாயத்துக்குத் தள்ளப்பட்டுள்ளன.