தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பிரம்மா குமாரி இயக்க தலைவர் தாதி ஜானகி காலமானார்! - பிரம்ம குமாரி இயக்கம்

மவுண்ட் அபு : பிரம்மா குமாரிகள் இயக்கத்தின் தலைவர் தாதி ஜானகி வயது முதிர்வு, உடல்நிலை காரணமாக இயற்கை எய்தினார்.

தாதி ஜானகி
தாதி ஜானகி

By

Published : Mar 27, 2020, 12:33 PM IST

பிரம்மா குமாரிகள் இயக்கத்தின் தலைமை நிர்வாகியாக இருந்தவர், தாதி ஜானகி. தனது 104ஆவது வயதிலும் உலகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆன்மீக சேவையில் ஈடுபட்டுவந்தார். இந்நிலையில், மூச்சுத்திணறல் காரணமாக தனியார் மருத்துவமனையில் இன்று காலமானார்.

எதிர்பாராத விதமாக, தனது ஆன்மீக சேவையை நிரந்தரமாக நிறுத்திக்கொண்ட தாதி ஜானகிக்கு, பிரதமர் மோடி ட்விட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார்.

அந்த பதிவில், “பிரம்மா குமாரிகள் இயக்கத்தின் தலைவரான தாதி ஜானகி சமூகத்திற்கு தொடர்ந்து சேவைசெய்தார். பிறரின் வாழ்க்கையை மாற்ற பாடுபட்டார். பெண்கள் முன்னேற்றத்தில் அவரது முயற்சிகள் குறிப்பிடத்தக்கவை. இந்த இழப்பின் சோகமான சமயத்தில் அவரின் தொண்டர்களுக்கு, பின்பற்றும் ஆதரவாளருக்கும் வருத்தத்தை தெரிவித்துக்கொள்கிறேன். ஓம் சாந்தி” எனக் குறிப்பிட்டுள்ளார்.

தன்னுடைய சிறுவயதிலேயே ஆன்மிகப் பாதையில் அடியெடுத்துவைத்தார். உலகின் மிகப்பெரிய ஆன்மிக அமைப்பான பிரம்மா குமாரிகள் இயக்கத்தின் தலைமை நிர்வாகியாக இருந்தார். ’ மிகவும் நிலையான மனம்’ கொண்டவர் என்ற பட்டத்தைப் பெற்ற ஒரே பெண்ணும் இவரே. ’உலகின் பாட்டி’ என மற்றொரு பட்டமும் இவருக்குண்டு. 140 நாடுகளில் இந்த இயக்கத்தினை அமைத்து, ஆன்மிக கருத்துகளை அவர் பரவலாக்கினார்.

இதையும் படிங்க:'வேலைக்குப் போகாதீங்க, வீட்டிலேயே இருங்க' - கதறி அழும் மகனை வாரியணைத்து தேற்றிய காவலர்!

ABOUT THE AUTHOR

...view details