லடாக் எல்லைப் பகுதியில் இந்தியா-சீனா ராணுவத்தினருக்கு இடையே கடந்த ஒருமாதத்துக்கும் மேலாக மோதல் நிலவிவருகிறது. இந்த மோதலை சுமுகமாக முடிவுக்குக் கொண்டுவருவது குறித்து உயர்மட்ட அளவில் தொடர் பேச்சுவார்த்தை நடந்துவரும் சூழலில், கடந்த திங்கள்கிழமை அன்று கல்வான் பள்ளத்தாக்கில் இருதரப்பு ராணுவத்தினருக்கும் இடையே ஏற்பட்ட கடும் மோதலில் 20 இந்திய வீரர்கள் வீரமரணடைந்தனர்.
இச்சம்பவம் நாட்டு மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சீனாவின் இந்த நடவடிக்கையை எதிர்க்கும் வகையில், சீனப் பொருள்களை புறக்கணிக்க வேண்டும் என்ற குரலும் வலுத்துவருகிறது.
இது குறித்து முன்னாள் மத்திய நிதி அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரத்திடம் ஈடிவி பாரத் சார்பில் கருத்து கேட்டபோது, "முடிந்த வரையில் நாம் தற்சார்பு பொருளாதாரமாக இருக்க வேண்டும். ஆனால், அதற்காக ஒட்டுமொத்த உலகையும் நாம் புறக்கணிக்க முடியாது.