புதுச்சேரி முத்தியால்பேட்டையைச் சேர்ந்த ஒன்பது வயது சிறுவன் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 8ஆம் தேதி வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தபோது, மாயமானார். இது குறித்து பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் முத்தியால்பேட்டை காவல் துறையினர் சிசிடிவி கேமரா பதிவுகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர். அதில் இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் ஒருவர் சிறுவனை கடத்திச் சென்றது தெரிய வந்தது.
இதனையடுத்து, அந்த வாகனத்தின் பதிவு எண்ணை கொண்டு விசாரணை நடத்தியதில், சிறுவனை கடத்தியது விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம், குண்டூர் கிராமத்தைச் சேர்ந்த உசைன் என தெரியவந்தது. சாக்லெட் வாங்கித் தருவதாகக் கூறி கடத்தி சென்று ஆள் நடமாட்டம் இல்லாத தென்னந்தோப்பில் சிறுவனுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துடன் , கொலை செய்ய முயன்றது தெரியவந்தது.