பெங்களூருவில் உள்ள சித்ரதுர்கா மாவட்டத்தைச் சேர்ந்தவர் பவன் (22). கூலித் தொழிலாளியாக வேலை செய்து வந்த இவர், கடந்த சில நாட்களாகவே தனது நண்பர்களிடம் தான் மிகவும் தனிமையாக உணர்வதாகவும், தனக்கெனெ யாருமில்லை எனவும் கூறி வந்ததாகக் கூறப்படுகிறது.
வாட்ஸப் ஸ்டேட்டஸில் தற்கொலை வீடியோ... இளைஞரின் சோகக்கதை! - suicide video
சித்ரதுர்கா: விரக்தியின் உச்சத்தில், தற்கொலை செய்து கொள்வதை வீடியோ எடுத்து வாட்ஸப் ஸ்டேட்டஸில் வைத்துவிட்டு இளைஞர் ஒருவர் தனது உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார்.
இளைஞன்
இந்த நிலையில், சித்ரதுர்கா ஏரியில் குதித்து பவன் தற்கொலை செய்துள்ளார். அதற்கு முன்னதாக தனது மன வேதனையை வீடியோவாக பதிவு செய்து, அதனை தனது வாட்ஸப் ஸ்டேடஸில் வைத்துவிட்டு இந்த காரியத்தில் ஈடுபட்டுள்ளார்.
இதற்கிடையே, பவனின் உடலை மீட்ட காவல் துறையினர், உடற்கூறாய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.