தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஒன்பது அரசுப்பணி; தந்தையை பெருமைபடுத்திய விவசாயி மகன்! - Boy from poor farmer family got 9 Job opportunities

பெங்களூரு: ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த விவசாயி மகன் ஒருவர் ஒன்பது அரசுப்பணி தேர்வவுகளில் தேர்வாகியுள்ள சம்பவம் அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Basavaraj chatnalli
Basavaraj chatnalli

By

Published : Dec 12, 2019, 10:37 AM IST

கர்நாடக மாநிலம் யாதகிரி மாவட்டத்தில் பாசவராஜ் என்ற விவசாயி வசித்துவருகிறார். ஏழ்மையினால் பாதிக்கப்பட்டு பல சவால்களை இவரின் குடும்பம் சந்தித்துவருகிறது. இதையடுத்து, கர்நாடக நிர்வாக சேவை தேர்வில் பாசவராஜின் இரண்டாவது மகன் வெங்கடேஷ் தேர்வாகியுள்ளார். இதற்கு முன்னதாக, இவருக்கு ஒன்பது அரசுப்பணி கிடைத்துள்ளது.

பணி தேர்வில் தேர்வாகியுள்ள இளைஞர்
கர்நாடக நிர்வாக சேவை, சிறைத்துறை, முதல் பிரிவு உதவியாளர், இரண்டாம் பிரிவு உதவியாளர் உள்ளிட்ட பல தேர்வுகளில் கலந்து கொண்டு வெங்கடேஷ் தேர்வாகியுள்ளார். கிராமத்தில் படித்துவிட்டு 9 அரசுப்பணி தேர்வுகளில் வெற்றிபெற்ற வெங்கடேஷை கிராமமக்கள் வெகுவாக பாராட்டிவருகின்றனர். ஒரு அரசு தேர்வில் தேர்ச்சியடைவதே கடினமாக இருக்கும் காலகட்டத்தில், 9 அரசு தேர்வில் விவசாயி மகன் தேர்வாகியிருப்பது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details