கர்நாடக மாநிலம் பெங்களூரு கெரூர் கிராமத்தில் குதிரைப் பந்தயம் நடைபெறுவது வழக்கம். அப்பந்தயத்தில் இம்முறை பயிற்சிப்பெற்ற சிறுவர்கள் கலந்து கொள்வதற்கான வாய்ப்பு அளிக்கப்பட்டது.
அப்போட்டியில் வியக்கவைக்கும் சம்பவம் ஒன்று அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஒன்பது வயதே ஆன சிறுவன் தன் குதிரையின் வேகம் குறையாமல் முதல் ஆளாக ஓட்டிச் செல்கையில் திடீரென்று குதிரை நிலை தடுமாறவும், அச்சிறுவன் கீழே விழுந்துவிட, குதிரை நிற்காமல் தொடர்ந்து ஓடியது.