உத்தரப்பிரதேசம், மொராதாபாத்தில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் பணியாற்றும் 30 வயதான சமூக அறிவியல் ஆசிரியர், கூகுள் மீட் வழியாக 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பு எடுத்துள்ளார். அப்போது, ஒரு மாணவர் ஆசிரியருக்கு ஆபாச மெசேஜ் ஒன்றை அனுப்பியுள்ளார். இதை, ஆன்லைனில் இருந்த அனைத்து மாணவர்களுக்கும் பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
ஆன்லைன் வகுப்பில் ஆசிரியருக்கு ஆபாச மெசேஜ் - மாணவர், தந்தை மீது வழக்குப்பதிவு - ஆன்லைன் வகுப்பு
லக்னோ : ஆன்லைன் வகுப்பில் தனியார் பள்ளி ஆசிரியருக்கு ஆபாச மெசேஜ் அனுப்பிய 10ஆம் வகுப்பு மாணவர், அவரது தந்தை இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இச்செயலால் அதிர்ச்சியடைந்த ஆசிரியர், அம்மாணவரைக் கண்டிக்க அவரது தந்தையை நேரில் அணுகியுள்ளார். ஆனால் மாணவரின் தந்தை, மகனைக் கண்டிக்காமல் தானும் அந்த ஆசிரியரிடம் தவறாக நடக்க முயற்சித்துள்ளார். அதனைத் தொடர்ந்து அங்கிருந்து தப்பியோடிய ஆசிரியர், நேராக காவல் நிலையத்திற்கு சென்று இச்சம்பவம் தொடர்பாக புகார் அளித்துள்ளார்.
இதையடுத்து, ஆசிரியரின் புகாரின்பேரில் தந்தை, மகன் இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர், தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், இச்சம்பவம் குறித்து பள்ளி நிர்வாகம் அறிந்திருந்தும், மாணவர், அவரது தந்தை ஆகியோர் மீது எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்காததாகவும் கூறப்படுகிறது.