நாடாளுமன்றத்தில் உறுப்பினர்களாக இருந்து, மறைந்த தலைவர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக, சில நிமிடங்கள் மௌன அஞ்சலி செலுத்திய பின் மக்களவையையும் மாநிலங்களவையையும் ஒத்திவைப்பது வழக்கம்.
அந்த வகையில், சமீபத்தில் மறைந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான ராம் ஜெத்மாலனி, அருண் ஜேட்லி, சுஷ்மா சுவராஜ், குருதாஸ் தாஸ்குப்தா ஆகியோருக்கு மரியாதை செலுத்துவதற்காக, இன்று சில மணி நேரங்கள் இரு அவைகளும் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.