டெல்லியில் வரும் 26ஆம் தேதி இந்திய குடியரசு தின விழா கொண்டாடப்படவுள்ளது. இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு பிரதமர் நரேந்திரமோடி அழைப்பு விடுத்திருந்தார். இந்த அழைப்பை பிரதமர் போரிஸ் ஏற்றுக் கொண்டிருந்த நிலையில், எதிர்பாராத விதமாக பிரிட்டனில் உருமாறிய கரோனா பரவல் தீவிரமடைந்தது.
இதனைக் கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் மீண்டும் முழு ஊரடங்கை பிரதமர் போரிஸ் ஜான்சன் அமல்படுத்தினார்.