போர் நிறுத்த ஒப்பந்தத்தைக் கருத்தில்கொள்ளாமல், இருநாடுகளுக்கும் இடையிலான எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் தொடர்ந்து தாக்குதல்கள் அரங்கேற்றிவருகின்றனர்.
இந்நிலையில், நேற்றிரவு 8.30 மணியளவில், ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்ட பகுதியில் கெர்னி, கஸ்பா, டெக்வார் ஆகிய எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதி மீது பாகிஸ்தான் ராணுவத்தினர், திடீர் தாக்குதல் நடத்தினர்.
இதற்குத் தக்க பதிலடி கொடுப்பதற்காக இந்திய பாதுகாப்புப் படை தயாராகிவருகிறது. பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை எனத் தெரிகிறது.
முன்னதாக, மார்ச் 19ஆம் தேதியும் பூஞ்ச் மாவட்டத்தின் டெக்வார் பகுதியில் இதுபோன்ற வன்முறைத் தாக்குதலில் பாகிஸ்தான் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:அறமற்ற அலட்சியத்தால் பாமரர்களைப் படுகுழியில் தள்ளாதீர்கள்