இந்திய, சீன நாடுகளுக்கிடையே கடந்த ஆறு மாத காலமாக பதற்றம் நிலவிவருகிறது. இதற்கு இன்னும் தீர்வு எட்டப்படாத நிலையில், எல்லை பிரச்னைக்கு இந்தியா தான் காரணம் என சீன வெளியுறவுத்துறை அமைச்சகம் மீண்டும் குற்றம்சாட்டியுள்ளது. இதற்கு பதிலளித்துள்ள இந்தியா, அமைதியை நிலைநாட்டும் வகையில் போடப்பட்ட ஒப்பந்தத்தை மீறி சீனா செயல்பட்டது என தெரிவித்துள்ளது.
ஒப்பந்தத்தை மீறும் வகையில் சீனா செயல்பட்டது - இந்தியா பதில்! - border situation in eastern Ladakh
டெல்லி: எல்லை பிரச்னைக்கு இந்தியாவே காரணம் என சீனா மீண்டும் குற்றம்சாட்டிய நிலையில், அமைதியை நிலைநாட்டும் வகையில் போடப்பட்ட ஒப்பந்தத்தை மீறி சீனா செயல்பட்டதாக இந்தியா பதிலளித்துள்ளது.
இதுகுறித்து வெளியுறவுத்துறை செயலாளர் அனுராக் ஸ்ரீவஸ்தவா கூறுகையில், "கடந்த ஆறு மாத காலமாக நிலவும் சூழ்நிலைகள் யாவும் சீனாவின் செயல்களால் நடந்தவை. கிழக்கு லடாக் பகுதியில் போடப்பட்ட ஒப்பந்தத்தை மீறி சீனா தன்னிச்சையாக செயல்பட்டது. இந்திய, சீன எல்லைப்பகுதியில் அமைதியை உறுதி செய்யும் வகையில் போடப்பட்ட ஒப்பந்தத்தை மீறி அவை அமைந்துள்ளன.
எல்லைப்பகுதிகளில் அமைதியை நிலைநாட்டும் வகையில் கடந்த 1993 மற்றும் 1996ஆம் ஆண்டுகளில் ஒப்பந்தம் போடப்பட்டது. இதுபோன்ற வழிகாட்டுதல்களை இரு தரப்பும் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். எல்லைப் பகுதிகளில் பாதுகாப்பு படைகளைக் குவிக்கக்கூடாது" என்றார்.