மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா உயர் நீதிமன்ற வளாகத்திற்கு உள்ளே பல இடங்களில் செப்டம்பர் 30ஆம் தேதி வெடிகுண்டு சம்பவம் நிகழ்த்த உள்ளதாக ஹர்தர்ஷன் சிங் நக்பால் என்பவர் தன் மகனுடன் சேர்ந்து உயர் நீதிமன்ற அலுவலருக்கு மிரட்டல் கடிதம் அனுப்பினார்.
உயர் நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்; தொடரும் பதற்றம்! - Bomb Threat to Calcutta High Court
கொல்கத்தா: உயர் நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

calcutta high Court
இதனையடுத்து,உள்துறை அமைச்சகத்திற்கு இந்த மிரட்டல் கடிதம் தொடர்பாக தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும், அசம்பாவிதங்கள் நடக்காமல் இருப்பதற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உள்துறை அமைச்சகத்திற்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
நாட்டின் பழமை வாய்ந்த உயர் நீதிமன்றங்களில் ஒன்றான கொல்கத்தா உயர் நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.