தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஒடிசா பள்ளியில் வெடிவிபத்து; 2 மாணவர்கள் படுகாயம்! - குண்டு வெடிப்பு

ஒடிசா: மகுராவில் உள்ள தனியார் மெட்ரிக் பள்ளியில் ஏற்பட்ட வெடிவிபத்தில் இரண்டு மாணவர்கள் பலத்தக் காயமடைந்தனர்.

bomb blast

By

Published : Jul 20, 2019, 11:35 PM IST

ஒடிசா மாநிலம், கஞ்ஜம் மாவட்டம், அஸ்கா அருகே மகுரா பகுதியில் தொடக்கப் பள்ளி உள்ளது. இங்கு பள்ளி மாணவர்கள் மதிய உணவு சாப்பிடும்போது திடீரென வெடிச்சத்தம் கேட்டுள்ளது. அதிர்ச்சி அடைந்த ஆசிரியர்கள் ஓடி வந்து பார்த்தபோது, இரண்டு மாணவர்கள் பலத்த காயமடைந்த நிலையில் இருந்தனர்.

அவர்களை மீட்ட ஆசிரியர்கள், அஸ்கா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக பெர்ஹாம்பூரில் உள்ள எம்.கே.சி.ஜி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர்.

சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், பள்ளி ஆசிரியர்கள், மாணவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். அதில், பேட்டரி வெடிப்பொருட்களை வைத்து மாணவர்கள் விளையாடியபோது, திடீரென பேட்டரி வெடித்துள்ளது என்று தெரியவந்துள்ளது.

பெர்ஹாம்பூர் மருத்துவமனை

இது குறித்து அம்மாநில கல்வி அமைச்சர் சமீர் ரஞ்சன் டாஷ், ஒரு வாரத்திற்குள் விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு மாவட்ட கல்வி அலுவலருக்கு உத்தரவிட்டுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details