தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

நாட்டு குண்டு வெடித்து விபத்து - 4 பேர் காயம் - four injured

புதுச்சேரி:  பிரபல ரவுடி நாட்டு குண்டு தயாரித்தபோது வெடித்து சிதறியதில், நான்கு பேர் காயமடைந்தனர்.  இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நாட்டு குண்டு வெடித்து விபத்து நான்கு பேர் காயம்

By

Published : Jul 9, 2019, 3:21 PM IST

புதுச்சேரி வில்லியனூர் அருகே உள்ள உத்தரவாகினி பேட் பகுதியைச் சேர்ந்தவர் பிரபல ரவுடி பாம் ரவி. இவர் மீது பல்வேறு கொலை, கொள்ளை வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில், துத்திப்பட்டு கிரிக்கெட் மைதானம் பின்புறம் பாம் ரவி தனது கூட்டாளிகள் 3 பேர் உடன் நாட்டு வெடிகுண்டு தயாரித்துக் கொண்டிருந்தார். அப்போது, எதிர்பாராத விதமாக வெடிகுண்டு வெடித்து. இதில், பாம் ரவியின் கைவிரல்கள் துண்டாகின. மேலும் அவரது கூட்டாளிகளின் கண்களில் மண் மற்றும் புகை விழுந்து பாதிப்பு ஏற்பட்டது.

நாட்டு குண்டு வெடித்து விபத்து நான்கு பேர் காயம்

இது குறித்து, தகவலறிந்து வந்த காவல்துறையினர் பாம்பு ரவி, கூட்டாளிகளை மீட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details