தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

சுஷாந்த் வழக்கை திசை திருப்ப பாலிவுட்டின் போதை பொருள் கலாசாரத்தை பாஜகவினர் பேசுகிறார்கள் - நக்மா குற்றச்சாட்டு! - சுஷாந்த் மரண வழக்கின் பாஜகவினர் திசைதிருப்புகின்றனர்

மும்பை: சுஷாந்த் மரண வழக்கிலிருந்து அனைவரையும் திசை திருப்பவே பாலிவுட்டில் போதை பொருள் கலாசாரம் அதிகமாகியுள்ளதாக என்ற பேச்சுகள் வர தொடங்கியுள்ளன என முன்னாள் நடிகையும் காங்கிரஸ் பிரமுகரான நக்மா குற்றஞ்சாட்டியுள்ளார்.

agam
nagma

By

Published : Sep 18, 2020, 12:55 PM IST

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை செய்துகொண்டது தொடர்பாக அவரது காதலி ரியாவை காவல் துறையினர் கைது செய்தனர். நாடு முழுவதும் உள்ள சுஷாந்த் ரசிகர்கள் அவருக்கு நீதி கிடைக்க வேண்டும் என குரல் எழுப்பினர். ஆனால், ரியாவிடம் விசாரணை நடத்துகையில் போதை பொருள் பயன்படுத்தியது தெரியவந்தது.

பின்னர் அமலாக்கத் துறையினர் நடத்திய விசாரணையில் பல பிரபலங்களின் பெயர்கள் வந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதற்கிடையே பாலிவுட்டில் போதை பொருள் எளிதாக கிடைக்கும் என்று நடிகா கங்கனா தெரிவித்ததையடுத்து, பலரும் தங்களது கருத்துக்களை தெரிவிக்க தொடங்கிவிட்டனர். தற்போது, போதை பொருள் தொடர்பான விவாதம் காரசாரமாக சென்று கொண்டிருக்கிறது.

இந்நிலையில், சுஷாந்த் மரண வழக்கிலிருந்து அனைவரையும் திசை திருப்பவே பாலிவுட்டில் போதை பொருள் கலாசாரம் அதிகமாகியுள்ளது என்ற பேச்சுகள் வரதொடங்கியுள்ளன என முன்னாள் நடிகையும் காங்கிரஸ் பிரமுகரான நக்மா குற்றஞ்சாட்டியுள்ளார்.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “சிபிஐ, என்சிபி, அமலாக்கத் துறை அலுவலர்களே சுஷாந்த் சிங் மரண வழக்கின் விசாரணை எந்த கட்டத்தில் உள்ளது. நாங்கள் நீண்ட நாள்களாக உங்களின் பதிலுக்காக காத்திருக்கிறோம். ஆனால், திடீரென தற்போது அனைத்து பாஜக கட்சியினரும் பாலிவுட்டின் போதை பொருள் கலாசாரத்தை பற்றித்தான் பேசி வருகின்றனர். ஆனால், நேஷன் இன்னும் #SSRDeathCase முடிவுக்காகத்தான் காத்திருக்கிறது” என பதிவிட்டுள்ளனர்.

அதுமட்டுமின்றி பலரும் தங்களது ஆதங்கத்தை ட்விட்டரில் தெரிவித்துவருகின்றனர். முதலில் #JusticeForSSR என தொடங்கிய மக்களின் குரலானது தற்போது 'Justice4kangana', 'Justice4ravikishan' என மாறிக்கொண்டே செல்கிறது என்றும் விரைவில் சுஷாந்த் மரண வழக்கின் குற்றவாளியை கண்டறிய வேண்டும் எனக் கூறுகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details