கடலூர் மாவட்டம் நெய்வேலியிலுள்ள என்எல்சி அனல் மின் நிலையத்தில் சுரங்கம் இரண்டில் உள்ள கொதிகலன் வெடித்து விபத்திற்குள்ளானது. இதில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். இருபதிற்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து சிகிச்சைப் பெற்றுவருகின்றனர்.
என்எல்சி விபத்து: தொழலாளர்களின் உயிரிழப்பு வேதனையளிக்கிறது- அமித்ஷா - நெய்வேலி அனல்மின் நிலைய விபத்து
டெல்லி: நெய்வேலி அனல்மின் நிலைய விபத்தில் தொழிலாளர்கள் இறந்தது வேதனை அளிப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இரங்கல் தெரிவித்துள்ளார்.
boiler blast in NLCIL in Neyveli: Amithsha condolences
இந்நிலையில், நெய்வேலி என்எல்சியில் ஏற்பட்ட விபத்து குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தொலைபேசி வாயிலாக கேட்டறிந்தார்.
மேலும், என்எல்சி அனல்மின் நிலைய விபத்தில் தொழிலாளர்கள் இறந்தது வேதனை அளிப்பதாக தெரிவித்த அமித்ஷா, மத்திய அரசு அனைத்து உதவிகளையும் செய்ய தயாராக இருப்பதாக முதல்வர் பழனிசாமியிடம் தொலைபேசியில் கூறியதாகவும் தெரிவித்துள்ளார்.