ஒடிசா மாநிலம் ராய்ரங்கப்பூர் கல்லூரியில் விரிவுரையாளராக பணிபுரிந்து வந்த பெண் ஒருவர், அக்டோபர் 30ஆம் தேதி ஜார்போக்காரியா (harpokharia police station) காவல் நிலையத்தில் அளித்த புகாரில் தன்னை உறவுக்கார இளைஞர் ஒருவர் பாலியல் வன்புணர்வு செய்ததாக குறிப்பிட்டிருந்தார்.
புகாரின் பேரில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். எனினும் குற்றவாளி கைதாகவில்லை. இந்த நிலையில் கல்லூரி விரிவுரையாளர் இன்று (டிச1) கல்லூரி விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார்.