தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

குப்பைத் தொட்டியில் பெண் சிசு சடலம்! - dead body

அமராவதி: ஆந்திர மாநிலத்தில் குப்பைத் தொட்டி ஒன்றில் பிறந்து சிலமணி நேரமேயான பெண் சிசுவின் சடலம் இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

newborn Baby

By

Published : Jun 24, 2019, 9:00 AM IST

ஆந்திர மாநிலம் அனந்தபுரம் அருகே அமைந்துள்ளது இந்துபுரம் பகுதி. இந்தப் பகுதியில் உள்ள குப்பைத் தொட்டியில் நேற்று, பிறந்து சிலமணி நேரமேயான பெண் சிசு இறந்த நிலையில் கிடந்துள்ளது.

இந்நிலையில், அப்பகுதி நாய்கள் அந்தக் குப்பைத் தொட்டியைச் சுற்றி குரைத்துக் கொண்டும், அதனை இழுத்துக் கொண்டும் இருந்தன.

இதனால், சந்தேகமடைந்த அப்பகுதியினர் நாய்களை துரத்திவிட்டு குப்பைத் தொட்டியைப் பார்த்தபோது, அதில் பெண் சிசுவின் சடலம் கிடப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

பின்னர், இது குறித்து அப்பகுதி சுகாதாரத் துறை அலுவலர்களுக்கும், காவல் துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, சம்பவ இடத்துக்கு வந்த அலுவலர்கள் குழந்தையின் உடலை பரிசோதிப்பதற்காக மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர்.

குப்பைத் தொட்டில் இறந்த நிலையில் கிடந்த பெண் சிசுவின் பெற்றோர் யார்? ஏன் குப்பைத் தொட்டியில் வீசினார்கள் என்பது குறித்து விசாரணை நடைபெற்றுவருகிறது.

ABOUT THE AUTHOR

...view details