தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பி.எம்.டபிள்யூ இந்திய தலைமை நிர்வாக அலுவலர் உயிரிழந்தார்! - பி.எம்.டபிள்யூ இந்தியா தலைமை அலுவலர் உயிரிழந்தார்

டெல்லி: பி.எம்.டபிள்யூ நிறுவனத்தின் இந்திய தலைமை நிர்வாக அலுவலர் ருத்ரதேஜ் சிங் இன்று மாரடைப்பால் உயிரிழந்தார்.

பி.எம்.டபிள்யூ இந்திய தலைமை அலுவலர் உயிரிழந்தார்
பி.எம்.டபிள்யூ இந்திய தலைமை அலுவலர் உயிரிழந்தார்

By

Published : Apr 20, 2020, 4:20 PM IST

பி.எம்.டபிள்யூ நிறுவனத்தின் இந்நிதய தலைவரும் தலைமை நிர்வாக அலுவலருமான ருத்ரதேஜ் சிங் இன்று காலை மாரடைப்பின் காரணமாக உயிரிழந்தார். இவர் பி.எம்.டபிள்யூ நிறுவனத்தில் தலைமை தாங்கிய முதல் இந்தியர் என்ற பெருமையுடையவர்.

இந்த துறையில், 25 ஆண்டுகளுக்கும் மேலாக அனுபவம் கொண்டவர். வாகனம், வாகனமற்ற துறையில் பல தலைமைப் பதவிகளை வகித்தவர்.

இதற்கு முன்பு, இவர் ராயல் என்ஃபீல்டில் தலைவராக இருந்தார். அதற்கு முன்பு அவர் இந்தியாவில் சர்வதேச சந்தைகளில் 16 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றினார்.

இத்தனை பெருமை கொண்ட ருத்ரதேஜ் சிங் இன்று காலை மாரடைப்பால் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்துவதாக பி.எம்.டபிள்யூ நிறுவனத்தினர் தெரிவிக்கின்றனர்.

இதையும் படிங்க: வீட்டிலிருந்தே எளிமையாக ரீசார்ஜ் செய்யலாம் - புதிய செயலியை அறிமுகப்படுத்திய ஜியோ

ABOUT THE AUTHOR

...view details