தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

முகக்கவசம் அணியாததால் கோடிக்கணக்கில் அபராதம்! - Union Health Ministry

மும்பை: கடந்த ஏப்ரல் முதல் அக்டோபர் வரையிலான காலகட்டத்தில், முகக்கவசம் அணியாததால் மூன்றரை கோடி ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டதாக மும்பை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

Alt
BMC

By

Published : Oct 31, 2020, 3:07 PM IST

கரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் பல பாதுகாப்பு வழிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன.

தகுந்த இடைவெளி கடைபிடித்தால் முகக்கவசம் அணிதல் போன்றவை கட்டாயமாக்கப்பட்டது. இந்நிலையில், மகாராஷ்டிராவில், கடந்த அக்டோபர் 29ஆம் தேதி மட்டும் விதிகளை மீறியதாக18 லட்சத்து 21 ஆயிரத்து 400 ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டது.

மும்பை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், அன்று ஒரே நாளில் 9 ஆயிரத்து 107 பேர் விதிகளை மீறி உள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் 20ஆம் தேதி முதல் அக்டோபர் 29ம் தேதி வரையிலான காலகட்டத்தில், ஒரு லட்சத்து 60 ஆயிரத்து 279 பேர் விதிகளை மீறியுள்ளனர்.

முகக்கவசம் அணியாத காரணத்தால் 3 கோடியே 49 லட்சத்து 34 ஆயிரத்து 800 ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டது மும்பை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

நாட்டிலேயே மகாராஷ்டிராவில் தான் கரோனாவின் தாக்கம் அதிகமாக உள்ளது. 15 லட்சத்திற்கும் மேற்பட்டோர் குணமடைந்த நிலையிலும் 43 ஆயிரத்திற்கும் மேலான உயிரிழப்பு சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.

ABOUT THE AUTHOR

...view details