அரபிக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலையால் மும்பைக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டு இருந்தது. அதனால் மும்பையில் கடந்த சில தினங்களாகவே பயங்கரமாக காற்று வீசி வருகிறது. இந்நிலையில், இன்று காலை 7.30 மணியளவில் மும்பை விமான நிலையத்தில் வீசிய பலத்த காற்றால், பார்க்கிங்கில் நிறுத்தப்பட்டிருந்த ஸ்பைஸ் ஜெட் விமானத்தின் ஒரு பகுதி கழன்று, அருகில் நின்று கொண்டிருந்த இன்டிகோ விமானத்தின் இறக்கைகள் மீது மோதியது.
பலத்த காற்று வீசியதால் இன்டிகோ மீது மோதிய ஸ்பைஸ் ஜெட்!
மும்பை: விமான நிலையத்தில் பலத்த காற்று வீசியதால், அங்கு நிறுத்தப்பட்டிருந்த ஸ்பைஸ் ஜெட் விமானத்தின் ஒரு பகுதி இன்டிகோ மீது மோதிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
spicejet
இச்சம்பவம் தொடர்பாக இன்டிகோ விமான நிர்வாகத்தின் செய்தித்தொடர்பாளர், "ஸ்பைஸ் ஜெட் விமானத்தின் ஒரு பகுதி பறந்துவந்து, விமானத்தைத் தாக்கியுள்ளது. இதனைச் சரிசெய்ய சிறிது காலமாகும்” என்றார்.
இதையும் படிங்க: 'ஜெ. அன்பழகன் திராவிடத்தின் சொத்து' - அமைச்சர் செல்லூர் ராஜூ