தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

விநியோகச் சங்கிலிகளில் ஏற்பட்டுள்ள பாதிப்பை 'பிளாக்செயின்' சரிசெய்யும் - உலக பொருளாதார மாநாடு - கரோனா வைரஸ் விநியோகச் சங்கிலி

டெல்லி : கரோனா பெருந்தொற்றால் சர்வதேச விநியோக சங்கிலிகளில் ஏற்பட்டுள்ள பாதிப்பைச் சரிசெய்ய பிளாக்செயின் தொழில்நுட்பம் உதவும் என உலக பொருளாதார மாநாடு கூறியுள்ளது.

World Economic Forum
World Economic Forum

By

Published : Apr 29, 2020, 9:00 AM IST

கரோனா பெருந்தொற்று காரணமாகச் சர்வதேச விநியோகச் சங்கிலிகளில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், வருங்காலத்தில் கரோனா போன்ற பெருந்தொற்றை எதிர்த்துப் போராடவும், கரோனா வைரஸ் பாதிப்பைத் தொடர்ந்து உலக நாடுகள் தங்களது பொருளாதாரத்தை விரைவில் மீட்டெடுக்க உதவும் நோக்கில் உலக பொருளாதார மாநாடு 'பிளாக்செயின் டெவலெப்மென்ட டூல்கிட்' என்ற சேவையைத் தொடங்கியுள்ளது.

இதுதொடர்பாக உலக பொருளாதார மாநாடு வெளியிட்டுள்ள அறிக்கையில், "கோவிட்-19 நோய் காரணமாகச் சர்வதேச வர்த்தக அமைப்பின் மீது அழுத்தம் ஏற்பட்டுள்ளது. சர்வதேச விநியோகச் சங்கிலிகளை வலிமையாக்க உலக நாடுகள் ஒத்துழைப்பு நல்க வேண்டிய அவசியத்தை இது உணர்த்துகிறது.

விநியோகச் சங்கிலிகளின் வலிமையானது, அதன் மீதான நம்பிக்கை, வெளிப்படைத் தன்மை, நேர்மை ஆகியவற்றைச் சார்ந்தே உள்ளது. இதற்கு பிளாக்செயின் தொழில்நுட்பம் உதவிகரமாக இருக்கும்.

இந்த பிளாக்செயின் டெவலெப்மென்ட் டூல்கிட்டை சிறு, குறு முதல் பெருநிறுவனங்கள் வரை அனைவரும் தீர்வுகாணப் பயன்படுத்தலாம். இது அனைவருக்கும் சமமான வாய்ப்பை ஏற்படுத்தி தரும்" எனக் கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : 'மன வலிமையோடு கரோனாவை வெல்வோம்' - முதலமைச்சர் பழனிசாமி

ABOUT THE AUTHOR

...view details