ராணுவ முகாமில் வெடிவிபத்து: ராணுவ வீரர் ஒருவர் பலி - ராணுவ முகாமில் வெடிவிபத்து
16:00 March 28
போபால்: மத்தியப் பிரதேசத்தில் உள்ள ராணுவ முகாமில் ஏற்பட்ட வெடிவிபத்தில் மூன்று ராணுவ வீரர்கள் படுகாயம் அடைந்தனர். ஒருவர் உயிரிழந்தார்.
மத்தியப் பிரதேசம் ஜபல்பூரில் உள்ள ராணுவ முகாமில் வெடிவிபத்து ஏற்பட்டது. விபத்தில் சிக்கி மூன்று ராணுவ வீரர்கள் படுகாயம் அடைந்தனர். ஒருவர் உயிரிழந்துள்ளார். காயமடைந்த மூவர் ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.
ஹைட்ரஜன் கேஸ் சிலிண்டர் வெடித்ததில், இந்த விபத்து ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. மத்திய இந்தியாவில் நக்சல் தீவிரவாதம் அதிகம் உள்ளதால், இந்த விபத்துக்கு அவர்கள் காரணமாக இருப்பார்களா என்ற சந்தேகமும் எழுகிறது. இதுகுறித்து, தொடர் விசாரணை மேற்கொள்ளப்பட்டுவருகிறது.