தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

லக்னோ நீதிமன்றத்தில் குண்டு வெடிப்பு - மூன்று வழக்கறிஞர்கள் காயம் - உத்தர பிரதேச செய்திகள்

லன்னோ: நீதிமன்ற வளாகத்தில் இன்று மதியம் நிகழ்ந்த குண்டு வெடிப்பில் மூன்று வழக்கறிஞர்கள் காயமடைந்துள்ளனர்.

Blast at Lucknow court
Blast at Lucknow court

By

Published : Feb 13, 2020, 4:51 PM IST

உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவிலுள்ள நீதிமன்ற வளாகத்தில் வியாழக்கிழமை (டிசம்பர் 13) காலை திடீரென்று குண்டு வெடித்தது. இந்த குண்டு வெடிப்பு குறித்து தகவலறிந்ததும், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல் துறையினரும் வெடிகுண்டு நிபுணர்களும், நீதிமன்ற வளாகத்திலிருந்து வெடிக்காத மூன்று குண்டுகளைக் கைப்பற்றினர்.

இந்தக் குண்டு வெடிப்பில் குறைந்தபட்சம் மூன்று வழக்கறிஞர்கள் காயமடைந்திருக்கலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து லக்னோ பார் அசோசியேஷன் இணைச் செயலாளர் சஞ்சீவ் குமார் லோதி கூறுகையில், "ஒரு சில நீதித்துறை அலுவலர்கள் குறித்து நான் புகார் அளித்ததால், என்னை குறிவைத்து இத்தாக்குதல் நடைபெற்றுள்ளது" என்று கூறினார்.

நீதிமன்ற வளாகத்திலேயே நிகழந்துள்ள இந்தக் குண்டு வெடிப்பு சம்பவம் பெரும் அசிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காவல் துறையினர் இச்சம்வம் குறித்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இதையும் படிங்க: அட்டகாசமாக ஆம் ஆத்மியை வாழ்த்திய அமுல்!

ABOUT THE AUTHOR

...view details