தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

தொடர் தாக்குதல்; ஏப்ரல் 23ஆம் தேதி போராட்டம் நடத்தும் மருத்துவர் கூட்டமைப்பு

டெல்லி: நாடு முழுவதும் மருத்துவர்களுக்கு எதிராக தொடர் தாக்குதல் நடத்தப்படும் நிலையில், இந்திய மருத்துவர் கூட்டமைப்பு வரும் 23ஆம் தேதி கருப்பு பேட்ஜ் அணிந்து போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளது.

கோவிட்
கோவிட்

By

Published : Apr 20, 2020, 8:12 PM IST

இந்தியாவில் கரோனா பாதிப்பை கட்டுப்படுத்த மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்கள் உயிரைப் பணயம் வைத்து தங்களது சேவையை மேற்கொண்டுவருகின்றனர். இருப்பினும் பொது மக்கள் சிலர் கரோனா அச்சம் காரணமாக மருத்துவர்கள், மருத்துவப் பணியில் ஈடுபடுவோர் மீது தாக்குதல் நடத்தும் சம்பவம் நாடு முழுவதும் அரங்கேறிவருகிறது.

சென்னையில் கரோனா பாதிப்பால் உயிரிழந்த மருத்துவர் இறுதிச் சடங்கில் கூட இதுபோன்ற சம்பவம் நேற்று (ஏப்ரல் 19) நடந்தது. இந்நிலையில், மருத்துவர்கள் மீதான தொடர் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து இந்திய மருத்துவர் கூட்டமைப்பு ஏப்ரல் 23ஆம் தேதி போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளது.

இந்திய மருத்துவர் கூட்டமைப்பு அறிக்கை

இது குறித்து இந்திய மருத்துவர் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், பணிச்சூழலில் மருத்துவர்களுக்கான பாதுகாப்பு உறுதிசெய்யப்பட வேண்டும். மருத்துவர்களுக்கு எதிரான தாக்குதல் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து மருத்துவர்கள் வரும் 22ஆம் தேதி இரவு மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டத்தை பதிவு செய்வோம் எனவும், வரும் 23ஆம் தேதி கருப்பு பேட்ஜ் அணிந்து பணிபுரிய போவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:கரோனாவைத் தடுக்க உதவும் இரு ஆயுதங்கள் - உலக சுகாதார அமைப்பு ஆய்வு தகவல்

ABOUT THE AUTHOR

...view details