பாட்னா:பிகாரின் துணை முதலமைச்சராக பாஜகவின் தர்கிஷோர் பிரசாத் தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
பிகார் சட்டப்பேரவை தேர்தலில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி 243 தொகுதிகளில் 125 தொகுதிகளை கைப்பற்றியது. அந்தக் கூட்டணியில் பாஜக 74 தொகுதிகளிலும், ஐக்கிய ஜனதா தளம் 43 தொகுதிகளிலும், முன்னாள் முதலமைச்சர் ஜிதன் ராம் மஞ்சியின் இந்துஸ்தான் அவாமி மோர்சா மற்றும் விகாஷீல் இன்சான் கட்சி தலா 4 தொகுதிகளிலும் வெற்றி பெற்றிருந்தன.
இந்நிலையில் நவ.15ஆம் தேதி நடந்த தேசிய ஜனநாயக கூட்டத்தில், மாநிலத்தின் முதலமைச்சராக ஐக்கிய ஜனதா தளத்தின் தலைவர் நிதிஷ் குமார் அதிகாரப்பூர்வமாக தேரந்தெடுக்கப்பட்டார். அவர் நவ.16 (இன்று) மாநிலத்தின் முதலமைச்சராக தொடர்ந்து நான்காவது முறையாக பதவியேற்கிறார்.
இதற்கிடையில் மாநிலத்துக்கு இரண்டு துணை முதலமைச்சர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதில் ஒருவர் பாஜகவின் தர்கிஷோர் பிரசாத் என்பதும் மற்றொருவர் பெண் தலைவர் என்றும் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: ஏழாவது முறை பிகார் முதலமைச்சராக பதவியேற்கிறார் நிதிஷ்குமார்