கர்நாடகா, மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களின் வரிசையில் ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் ஆட்சியிலும், கட்சியிலும் விரிசல் ஏற்பட்டுள்ளது.
ராஜஸ்தான் மாநில முதலமைச்சர் அசோக் கெலாட் மற்றும் துணை முதலமைச்சர் சச்சின் பைலட் இருவருக்கும் இடையேயான மோதல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே, அதிருப்தியில் இருக்கும் சச்சின் பைலட்டின் ஆட்சி மற்றும் கட்சி பொறுப்புகளை காங்கிரஸ் மேலிடம் பறித்ததையடுத்து, இந்த மோதல் உச்சம் தொட்டது.
ராஜஸ்தானை ஆளும் காங்கிரஸ் கட்சியின் ஆட்சியைக் கலைக்க முயன்றதாக குற்றஞ்சாட்டப்பட்ட இரண்டு எம்.எல்.ஏ.க்கள் சட்டப்பேரவைத் தலைவரால் இடைநீக்கம் செய்யப்பட்டனர். அவர்கள் இருவரும் பாஜகவின் மத்திய அமைச்சர் ஒருவருடன் சேர்ந்து காங்கிரஸ் அரசை கவிழ்க்க சதி செய்ததாக கூறப்பட்டது.
இந்நிலையில், பாஜக தலைவரும், மத்திய அமைச்சருமான கஜேந்திர சிங் சேகாவத் மற்றும் அதிருப்தி காங்கிரஸ் எம்எல்ஏ பன்வர்லால் சர்மா ஆகியோர் பேசிய ஆடியோ டேப் அண்மையில் வெளியானதை அடுத்து பாஜக இதன் பின்னணியில் இருப்பதாக செய்திகள் பரவின.
இது தொடர்பாக ஊடகங்களை காணொலி வாயிலாகச் சந்தித்து பேசிய காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் பவன் கெரா," வெளியான ஆடியோ டேப்கள் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று பாஜக கோருவது வேடிக்கையாக உள்ளது.