கரோனா வைரஸ் காரணமாக நாடு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், துக்க நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக குஜராத் மாநிலத்திற்கு இரண்டு மதகுருக்கள், ஒரு ஓட்டுநர் என மூன்று பேர் மகாராஷ்டிராவின் காண்டிவலி பகுதியிலிருந்து வாடகைக் காரில் புறப்பட்டுள்ளனர். இதற்கிடையில் பல்கர் பகுதியின் பல்வேறு இடங்களில் திருட்டுச் சம்பவங்கள் நடந்துள்ளன.
அதனால் அப்பகுதினர் இரவு நேரங்களில் ஊரைப் பாதுகாக்கும் வேலைகளில் ஈடுபட்டிருந்தனர். இரவு நேரத்தில் பல்கர் பகுதிக்கு கார் வந்தபோது, அவர்களைத் குழந்தை கடத்தல்காரர்கள் என நினைத்து பொதுமக்கள் தாக்கியுள்ளனர். பொதுமக்களின் இந்தக் கும்பல் தாக்குதலில் மூன்று பேரும் உயிரிழந்தனர்.
இதையடுத்து இந்தத் தாக்குதலுக்கு காரணமான 110 பேர் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து கைதுசெய்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக விரிவான விசாரணையை மேற்கொள்ள மாநில அரசு சிஐடி விசாரணைக்கு உத்தரவிட்டது. இந்நிலையில் பாஜகவினர் சிலர் இந்த சம்பவத்தை மத ரீதியில் அணுகுவதாகவும், இதனை அரசியலாக்க முயற்சிப்பதாகவும் காங்கிரஸ் கூறியுள்ளது.