தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

மேற்கு வங்கத்தில் தொடரும் சந்தேக மரணங்கள்! - மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா

கொல்கத்தா: மேற்கு வங்கம் மாநிலம் ஹூக்லி மாவட்டத்தில் பாஜக உறுப்பினர் ஒருவர், தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.

மேற்கு வங்கத்தில் தொடரும் மர்ம மரணங்கள்!
மேற்கு வங்கத்தில் தொடரும் மர்ம மரணங்கள்!

By

Published : Sep 13, 2020, 4:18 PM IST

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா அருகே கணேஷ் ராய் என்ற பாஜக உறுப்பினர், கோகாட் பகுதியில் உள்ள கானாட்டியில் மரத்தில் தொங்கிய நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். அம்மாநிலத்தை ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் உறுப்பினர்களால், அவர் கொலை செய்யப்பட்டதாக பாஜக குற்றஞ்சாட்டியுள்ளது. இதற்கு திரிணாமுல் காங்கிரஸ் மறுப்பு தெரிவித்துள்ளது.

நேற்று (செப்டம்பர் 12) மாலை முதல் கணேஷ் ராயை காணவில்லை என்றும், அவரை தேடப்பட்டு வந்தபோது, மரத்தில் தொங்கிய நிலையில் சடலமாக காணப்பட்டார் என்றும், அவரது மரணத்தின் பின்னணி குறித்து விசாரிக்கப்பட்டு வருவதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

இந்த மரணம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அம்மாநில பாஜக தலைவர் திலீப் கோஷ், பாஜக உறுப்பினர் ராய் திரிணாமுல் காங்கரிஸ் கட்சியினரால் கொலை செய்யப்பட்டு, பின்னர் அவரது உடல் நள்ளிரவு நேரத்தில் மரத்தில் தூக்கிலிடப்பட்டதாக குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும், பாஜக உறுப்பினரின் மரணத்திற்கு வலுவான எதிர்ப்பைத் தெரிவிப்போம் என்றும் பாஜகவுக்கு பெருகிவரும் ஆதரவு குறித்து திரிணாமுல் காங்கிரஸ் அஞ்சுகிறது என்றும் கூறியுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details