சுவேந்து அதிகாரி தலைமையில் நந்திகிராம் பகுதியில் நடந்த பாஜக பேரணியில் கலந்துகொள்ள வந்த பாஜகவினரை அடையாளம் தெரியாத நபர்கள் தாக்கியுள்ளனர். இதில் 3 பேர் மிகக் கடுமையான தாக்குதலுக்கு ஆளாகி சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது. இந்த தாக்குதல் தொடர்பாக ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் மீது பாஜகவினர் குற்றம்சாட்டியுள்ளனர்.
பாஜகவினர் மீது தாக்குதல்; திரிணாமுல் காங்கிரஸ் மீது சந்தேகம்! - பாஜக தலைவர் கனிஷ்கா
நந்திகிராம்: மேற்கு வங்கத்தில் நடந்த பாஜக பேரணியில் கலந்துகொள்ள வந்த பாஜகவினர் தாக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
![பாஜகவினர் மீது தாக்குதல்; திரிணாமுல் காங்கிரஸ் மீது சந்தேகம்! BJP workers attacked](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-10047357-629-10047357-1609246829210.jpg)
BJP workers attacked
இதுகுறித்து பாஜக தலைவர் கனிஷ்கா பாண்டா, டிஎம்சி அடியாட்களால் எங்கள் கட்சியினர் தாக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து அறிந்ததும் மருத்துவமனைக்கு விரைந்து வந்தோம். காவலர்கள்தான் முறையான பாதுகாப்பு வழங்கியிருக்க வேண்டும். எங்கள் கட்சியினர் தாக்கப்பட்டதற்கு கண்டனங்களை தெரிவித்துக்கொள்கிறேன் என தெரிவித்தார்.
இந்த சம்பவம் குறித்து திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் சுப்ரகாஷ் கிரி, பாஜக ஊழியர்களோடு எங்கள் கட்சிக்கு எந்த வேலையும் இல்லை. இது அவர்களின் உட்கட்சி வன்முறை என தெரிவித்தார்.
BJP workers attacked