மேற்கு வங்கத்தின் கிழக்கு மிட்னாபூர் மாவட்டத்தின் பாஜக நிர்வாகி பூர்ணசந்திர தாஸ் என்பவர் நேற்று (ஜூலை 30) தனது வீட்டின் அருகே தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கண்டறியப்பட்டார். 44 வயதான அவர், தெற்கு வங்காள மாவட்டத்தின் ராம்நகர் பகுதியில் பாஜக சாவடி தலைவராக இருந்தார்.
மேற்கு வங்கத்தில் பாஜக நிர்வாகி தூக்கிட்டு தற்கொலை - தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்ட பாஜக தொழிலாளி
கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் பாஜக நிர்வாகி ஒருவர் சந்தேகமான முறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
![மேற்கு வங்கத்தில் பாஜக நிர்வாகி தூக்கிட்டு தற்கொலை bjp-worker-found-hanging-from-tree-in-west-bengal](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-07:41:53:1596075113-8225638-assam.jpg)
bjp-worker-found-hanging-from-tree-in-west-bengal
இது குறித்து தாஸின் குடும்பத்தினர் கூறுகையில், உள்ளூர் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்கள் கடந்த சில நாட்களாக தங்கள் கட்சியில் சேர பூர்ணசந்திர தாஸுக்கு அழுத்தம் கொடுத்து வந்தனர். ஆனால் அவர் மறுப்பு தெரிவித்து வந்தார். இதனிடையே, டி.எம்.சி தலைவர்களுடன் கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டிருந்த நிலையில், அவர் உயிரிழந்து விட்டார்" என்றனர்.