ராஜஸ்தானில் அரசியல் குழப்பம் உச்சம் அடைந்துள்ள நிலையில், செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் பவன் கெரா, “காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை, தன் வசம் ஈர்க்க பாஜக முயற்சித்துவருகிறது. அவர்களை பாஜக ஆளும் மாநிலமான கர்நாடகாவுக்கு மாற்ற தொடர்ந்து முயற்சிக்கிறது.
வரலாற்றில் முதல் முறையாக, வேறொரு மாநிலத்தின் காவல் துறையினர் ராஜஸ்தான் காவல் துறையினரை தடுத்து, எம்.எல்.ஏ.க்களை பின் கதவு வழியாக தப்பிக்க ரகசியமாக அனுமதித்தனர். இந்த விவகாரம் குறித்த திறந்த விசாரணையைத் தடுக்க பாஜக அதிகாரப்பூர்வமாக ஹரியானாவில் தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தியது.
காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களைக் தன் வசம் ஈர்த்து ராஜஸ்தானில் நெருக்கடியை உருவாக்க பாஜகவை நாங்கள் அனுமதிக்கமாட்டோம். தேர்தலில் வெற்றி பெறுவதும், நாட்டை ஆட்சி செய்வதும் ஒரே நோக்கமாக கொண்டு இருக்கும் பாஜக, தேர்தலில் தோற்றாலும், ஜனநாயகத்தைத் தகர்த்தெறிந்து ஆட்சியை கைப்பற்ற எந்த அளவிற்கும் செல்லும். காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை தீய சக்திகளிடமிருந்து பாதுகாப்பதே எங்கள் ஒரே கடமை,
ராஜஸ்தான் காவல் துறையினர்விட சச்சின் பைலட் ஹரியானா காவல் துறையிரையே 'நம்புகிறார்'. இருப்பினும் காங்கிரஸ் கட்சியின் கதவுகள் சச்சின் பைலட்டிற்கு இன்னும் மூடப்படவில்லை
இன்று, ராஜஸ்தானில் ஜனநாயகம் கொலை செய்யப்பட்டதில் பாஜகவினர் தங்கள் பங்கை ஒத்துக்கொண்டனர். இது ஒரு கொலைகாரன் ஒரு கொலை செய்ததைக் கண்டு சாட்சி சொல்வது போன்றது, 'அவர்கள் எனது அறையை எட்டிப் பார்த்தபோது எனது தனியுரிமையை மீறவில்லையா?” என்று பாஜகவை கடுமையாக சாடியுள்ளார்.