கரோனா பெருந்தொற்று பாதிப்பு நாட்டில் வேகமாகப் பரவிவந்தாலும் அரசியல் பரபரப்புகளும் பஞ்சமில்லாமல் அரங்கேறிவருகின்றன. நாட்டில் ரிசார்ட் (உயர் ரக சொகுசு விடுதி) அரசியல் மீண்டும் திரும்பியுள்ளது.
காங்கிரஸ், கூட்டணிக் கட்சியைச் சேர்ந்த 90-க்கும் மேற்பட்ட சட்டப்பேரவை உறுப்பினர்கள் டெல்லியில் உள்ள உயர் ரக சொகுசு விடுதியில் சில தினங்களுக்கு முன் தங்கவைக்கப்பட்டிருந்தனர்.
அதன்பின்னர் அவர்கள் ராஜஸ்தானுக்கே திரும்ப கொண்டுவரப்பட்டு அங்குள்ள உயர் ரக சொகுசு விடுதியில் தங்கவைக்கப்பட்டனர். அவர்களைச் சந்தித்த அம்மாநில முதலமைச்சர் அசோக் கெலாட் நீண்ட நேரம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். அவருடன் மூத்தத் தலைவர் ரண்தீப் சுர்ஜேவாலா உடனிருந்தார்.