மகாராஷ்டிராவில் விவசாயிகள் பிரச்னை பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திவருகிறது. இந்நிலையில், பலத்த எதிர்பார்ப்புகளுக்கிடையே அம்மாநில சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படவுள்ளது. பட்ஜெட்டை முன்னிட்டு நடத்தப்படவுள்ள தேனீர் விருந்தில் பாஜக பங்கேற்காது என அம்மாநில முன்னாள் முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், "நவம்பர் 28ஆம் தேதி, சிவசேனா தலைமையில் ஆட்சி அமைக்கப்பட்டது. ஆனால், எந்த ஒரு திட்டமிடலும் இன்றி ஆட்சி நடைபெற்றுவருகிறது. எனவே, அரசு சார்பாக நடத்தப்படும் தேனீர் விருந்தில் பங்கேற்க மாட்டோம். ஒத்துழைப்புக்காகவே தேனீ விருந்து நடத்தப்படுகிறது. ஆனால், சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகள் ஒத்துழைப்பை மேம்படுத்த வேண்டும்.