தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

’எப்போதான் ப்ரோ கரெக்ட்டா வேலை செய்வீங்க’ - பாஜகவை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள் - ட்விட்டர் ட்ரென்டிங்க் இன்று

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு ஆதரவாக, IndiaSupportsCAA என்ற ஹேஷ்டேக்குக்கு பதில் IndiaSupportsCCA என்று தவறான ஹேஷ்டேக்கை பாஜக ஆதரவாளர்கள் ட்விட்டரில் ட்ரெண்டாக்கியுள்ளனர்.

twitter trending
twitter trending

By

Published : Dec 31, 2019, 8:08 PM IST

அண்டை நாடுகளிலிருந்து இந்தியாவிற்கு வரும் இந்து, கிறிஸ்தவ, சீக்கிய மத அகதிகளுக்கு குடியுரிமை வழங்க வழிசெய்யும் குடியுரிமை சட்டத்திருத்த மசோதா இம்மாத தொடக்கத்தில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு சட்டமாக்கப்பட்டது.

ஆனால். இந்த சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளது. அதேபோல் மறுபக்கம், இச்சட்டம் தொடர்பாக மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தவும் மத்திய அரசு முயற்சித்துவருகிறது.

இந்நிலையில், ட்விட்டரில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு ஆதரவாக ட்விட்டரில் #IndiaSupportsCCA என்ற ஹேஷ்டேக் இன்று காலை முதல் ட்ரெண்டாகிவருகிறது. இதில் கவனிக்க வேண்டியது என்னவென்றால், குடியுரிமை திருத்தச் சட்டத்தை ஆங்கிலத்தில் CAA என்றுதான் அழைக்கவேண்டும். ஆனால், பாஜக ஆதரவு நெட்டிசன்களோ, ஒரு வேகத்தில் CCA என்ற ஹேஷ்டேக்கை ட்விட்டரில் ட்ரெண்டாக்கியுள்ளனர். அவர்களின் இந்த செயலை பெரும்பாலானோர் கலாய்த்துவருகின்றனர்.

twitter trending

இதையும் படிங்க: குடியுரிமை சட்ட போராளிகளுக்கு காங்கிரஸ் சட்ட உதவி?

ABOUT THE AUTHOR

...view details