தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பாஜகவை சூசகமாக தாக்கிய சுப்பிரமணியன் சுவாமியின் ட்விட்டர் பதிவு! - சுப்ரமண்யம் சுவாமி

பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி இந்தியாவின் புதிய பொருளதாரக் கொள்கை பற்றி வெளியிட்டுள்ள பதிவு மக்களிடையே சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

BJP Subramanian Swamy

By

Published : Aug 31, 2019, 5:32 PM IST

பாஜகவின் மூத்த தலைவரான சுப்பிரமணியன் சுவாமி தனது ட்விட்டர் பக்கத்தில் இந்திய பொருளாதாரத்தின் நிலையைப் பற்றிய கருத்தினை வெளியிட்டு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.

அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், 'தற்போதுள்ள புதிய பொருளாதாரக் கொள்கை வராமல் இருந்திருந்தால் 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்திற்கு விடை கொடுக்கத் தயாராக இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார். மேலும் தைரியம் மற்றும் அறிவால் மட்டுமே பொருளாதார சரிவை மீட்டெடுக்க முடியாது என்றும், அதற்கு இரண்டும் தேவை என்றும் குறிப்பிட்டுள்ளார். இறுதியாக, தைரியமும் அறிவும் நம்மிடம் இல்லை என்றும் கூறியுள்ளார்.

தற்போது இவரின் பதிவு பாஜகவினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி, வைரலாகி வருகிறது.

ABOUT THE AUTHOR

...view details