தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

‘ஜனநாயக நாட்டில் பேச்சுரிமையை நசுக்கும் பாஜக!’ - பெங்குசராய் மக்களவை தொகுதி வேட்பாளர்

பிகார்: ஜனநாயக நாடான இந்தியாவில், தேர்தல் பரப்புரையைக் கூட சரிவர மேற்கொள்ளவிடாமல் பாஜகவினர் துன்புறுத்துவதாக கனையா குமார் குற்றம்சாட்டியுள்ளார்.

கன்ஹையா குமார்

By

Published : Apr 25, 2019, 5:55 PM IST

Updated : Apr 25, 2019, 7:28 PM IST

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவத் தலைவரும், பிகார் மாநிலத்தின் பெகுசராய் மக்களவைத் தொகுதியின் இந்திய கம்யூனிஸ்ட்வேட்பாளருமான கனையா குமார் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, ”எங்களை முடக்கும் நோக்கத்தில் தேர்தல் பரப்புரைகளில், பாஜக தொண்டர்கள் புகுந்து மக்களைத் திசை திருப்ப முயற்சிக்கின்றனர்.

நான் நேரடியாக பாஜகவை எதிர்கொள்கிறேன். பாஜகவின் பொய் வாக்குறுதிகளை மக்களிடம் கொண்டு சேர்ப்பேன். என்னை எதிர்த்துப் போட்டியிடும் பாஜக வேட்பாளரைத் தோற்கடிப்பேன்” என்றார்.

பெகுசராய் மக்களவைத் தொகுதியில் பாஜக சார்பில் கிரிராஜ் சிங்கும், காங்., கூட்டணியின் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் சார்பில் தன்வீர் ஹசானும் போட்டியிடுகின்றனர். இங்கு ஏப்ரல் 29ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

Last Updated : Apr 25, 2019, 7:28 PM IST

ABOUT THE AUTHOR

...view details