பிரதமர் நரேந்திர மோடி, உள் துறை அமைச்சர் அமித் ஷா கூட்டணியின்போது பாஜக நாடு முழுக்க காலூன்றியது. நரேந்திர மோடி பிரதமராக உயர அமித் ஷாவின் பங்கு அளப்பரியது. அமித் ஷா, உத்தரப் பிரதேசத்தின் அரசியல் மேற்பார்வையாளராகப் பொறுப்பேற்றுக்கொண்டார்.
அந்த மக்களவைத் தேர்தலில் பாஜக உத்தரப் பிரதேசத்தில் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இது 2019 மக்களவைத் தேர்தலிலும் தொடர்ந்தது. மொத்தமுள்ள 80 தொகுதிகளில் பாஜக 62 தொகுதிகளில் வெற்றிபெற்றது.
அமித் ஷா தேர்தல் பொறுப்பாளராக இருந்தபோது, மாயாவதியின் பகுஜன் சமாஜ், அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி ஆகிய கட்சிகளுக்கு சிம்ம சொப்பனமாக இருந்தார். இதுமட்டுமின்றி பல்வேறு மாநிலங்களிலும் பாஜக வெற்றிபெற்று மீண்டும் மோடி ஆட்சிக்கு வந்தார்.