தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஆந்திராவின் முன்னாள் அமைச்சர் கரோனாவால் மரணம்! - ஆந்திர அமைச்சர்

அமராவதி: ஆந்திராவின் முன்னாள் அமைச்சரும், பாஜகவின் மூத்த தலைவருமான மாணிக்யால ராவ் கரோனா தொற்றால் இன்று (ஆகஸ்ட் 1) உயிரிழந்தார்.

ஆந்திரா  ஆந்திரா பாஜக மூத்த தலைவர் கரோனாவால் மரணம்  Manikyala Rao mla death  மாணிக்யால ராவ்  ஆந்திர அமைச்சர்  Manikyala Rao corona
முன்னாள் ஆந்திர அறநிலையத் துறை அமைச்சர் கரோனாவால் மரணம்

By

Published : Aug 1, 2020, 7:57 PM IST

ஆந்திரா மாநிலத்தின் பாஜக மூத்த தலைவரான, பைடிகொண்டலா மாணிக்யால ராவ் (59), கோவிட்-19 தொற்றால் இன்று (ஆகஸ்ட் 1) உயிரிழந்தார். வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட அவர், கடந்த ஒரு மாதகாலமாக விஜயவாடாவிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்தார். அவரது உடல்நிலை சமீபத்தில் மோசமடைந்ததைத் தொடர்ந்து இன்று பிற்பகல் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

தொழில்முறை புகைப்படக் கலைஞராக தனது வாழ்க்கையைத் தொடங்கிய அவர், பின்னாட்களில் அரசியலில் ஈடுபடத் தொடங்கினார். பாஜகவின் சிறந்த செயல்வீரராகத் திகழ்ந்த அவர், இரண்டு முறை சட்டப்பேரவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

தெலுங்கு தேசம் கட்சி கடந்த முறை ஆட்சியிலிருந்த போது அறநிலையத் துறை அமைச்சராக பதவி வகித்த இவரின் மரணத்திற்கு, ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி, தெலுங்கு தேசம் கட்சியினர், பாஜகவினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க:மாநிலங்களவை உறுப்பினர் அமர் சிங் காலமானார்

ABOUT THE AUTHOR

...view details